பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே நோக்கம் - பிரதமர் » Sri Lanka Muslim

பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே நோக்கம் – பிரதமர்

IMG_20190908_064226

Contributors
author image

Editorial Team

யாழ் தீபகற்பத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வதில் சமகால அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 வருடத்தை இலக்காகக்கொண்டு யாழ்ப்பாணத்தை அபிவிருத்திச் செய்வதற்கான புதிய அபிவிருத்தித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.073A5674இந்த புதிய அபிவிருத்தித் திட்டம் யாழ மக்கள் பிரதிகளுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் முழுமையான அபிவிருத்தியை ஏற்படுத்தி பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என்றும் பிரதமர் கூறினார்.073A5650 யாழ்ப்பாணம் புதிய நகர சபைக்கான கட்டடத்திற்கு நேற்று காலை பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இதன் பின்னர் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகையில், யுத்த காலத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா ஆகிய பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்தன. இருப்பினும், யாழ்ப்பாணம் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது. இதனால் தான், 2015ஆம் ஆண்டில் நாம் இந்த நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தீர்மானித்தோம். எமது இலங்கையின் கலாசாரங்களில் முக்கிய நகரம் யாழ்ப்பாணம் என்று கூறலாம். 073A5888நல்லூர் நகரம் தான் தமிழ் மக்களின் கேந்திர பிரதேசமாக இருக்கின்றது.073A5731ஆகவே அந்த மாளிகையில் சிதைவடைந்த பகுதிகளை நாங்கள் இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அமைச்சர் தயாரித்து சமர்ப்பித்துள்ள திட்டத்தின் படி கட்டாயமாக நாங்கள் இந்த மாநகரத்தை கட்டியெழுப்புவோம்.073A5788 இத்தகைய அபவிருத்திகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய நிதி நன்கொடைக்கும் நன்றி கூற வேண்டும். அடுத்ததாக கலாசார மத்திய நிலையத்தை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறேன். அதே சந்தர்ப்பத்தில் இந்த நகர மண்டபத்தை நாங்கள் கட்டாயமாகக் கட்டியெழுப்புவோம்.

அதேபோல் சந்தைத் தொகுதி கட்டுமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். நெடுந்தூர பயணிகளுக்கான கட்டடப் பணிகள் பூர்த்தி செய்யும் தருவாயில் உள்ளது அதனையும் நாங்கள் பூர்த்தி செய்வோம்.073A5791குறிப்பாக இங்கு நகர பிதா கூறியிருப்பது போல கட்டட வடிவமைப்பின் படி கட்டடத்தை அமைப்போம் என்பதையும் உறுதியாக சொல்ல விரும்புகிறேன். அதனூடாகத் தான் புதிய யாழ்ப்பாணத்தை எங்களால் கட்டியெழுப்ப முடியும்” என்று தெரிவித்தார்.073A5793

நான் விசேடமாக இதனை நினைவில் கொள்வதுண்டு. யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை, தீவுப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்வது ஆகியன தொடர்பிலான வேலைத்தி;ட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். முக்கிய அபிவிருத்தி வலயத்தின் ஊடாக இதனை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். காங்கேசந்துறை துறைமுகத்தை மேம்படுத்தி, சீமெந்து கூட்டுத்தாபனம் இருந்த இடத்தில் தொழிற்சாலை முதலீட்டு வலயம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். புதிய தொழில்நுட்பத்துடன், விவசாயத்துறை மேம்படுத்தப்படும். விசேடமாக தொடர்பாடல் வர்த்தகப் பொருளாதாரத்தை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சி, பூநகரி அபிவிருத்தி செய்யப்படும். இதேபோன்று, இந்தப் பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக நிதியம் ஒன்றை நாம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்

அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, மேல் மகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka