விஞ்ஞானம், கணிதம் கற்கைநெறிகளுக்காக மேலும் 2 கல்வியியல் கல்லூரிகள் - கல்வி அமைச்சர் » Sri Lanka Muslim

விஞ்ஞானம், கணிதம் கற்கைநெறிகளுக்காக மேலும் 2 கல்வியியல் கல்லூரிகள் – கல்வி அமைச்சர்

IMG_20190909_092640

Contributors
author image

Editorial Team

விஞ்ஞானம், கணிதம் கற்கைநெறிகளுக்காக மேலும் 2 கல்வியியல் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற 19 கல்வியியல் கல்லாரிகளில் 31 கல்வி கற்கை நெறிகளின் கீழ் பயிற்சிகளைப் பெற்ற 4,300 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்விலேவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2 கல்வியியல் கல்லூரிகளை அமைப்பதற்கான அமைச்சரவை ஆவணம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். இதுவரையில் நாட்டில் 20 கல்வியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதை துரிதமாக்கி ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 4,000 அதிபர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் 2,000 பேருக்கு அதிபர் நியமனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையில் மனித வள மற்றும் பௌதீக வளத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka