விசேட தெரிவுக்குழுவில் 20ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலை » Sri Lanka Muslim

விசேட தெரிவுக்குழுவில் 20ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலை

sri-lanka-president-maithripala-sirisena3_0

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி  தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட தெரிவுக்குழுவினை சந்திக்க தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி ஊடாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும்  ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by The Design Lanka