கொழும்பு - பொலன்னறுவை இடையில் சொகுசு ரயில் சேவை » Sri Lanka Muslim

கொழும்பு – பொலன்னறுவை இடையில் சொகுசு ரயில் சேவை

IMG_20190911_161114

Contributors
author image

Editorial Team

கொழும்பு – கோட்டையிலிருந்து பொலன்னறுவை ரயில் நிலையம் வரையில் ‘புலத்திசி’ என்ற பெயரில் சொகுசு ரயில் சேவையொன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை புகையிரத திணைக்களமானது, எஸ் 13 ரக என்ற இந்த சொகுசு ரயில் சேவையை கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு இன்று (11) முதல் ஆரம்பிக்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தின் மூன்றாவது மேடையிலிருந்து இந்த கடுகதிரயில் இன்று மாலை 3.05 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது இன்றிரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையவுள்ளது. நாளை (12) மாலை 3.45 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தை இரவு 9.06 மணிக்கு வந்தடையவுள்ளது.

பொலன்னறுவை, குருணாகல், மஹவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குராக்கொட ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த புகையிரதம் நிறுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka