தாமரை கோபுரம் 16ம் திகதி மக்களிடம் கையளிப்பு » Sri Lanka Muslim

தாமரை கோபுரம் 16ம் திகதி மக்களிடம் கையளிப்பு

IMG_20190911_162114

Contributors
author image

Editorial Team

தென் ஆசியாவின் பாரிய கோபுரம் ஆன தாமரை கோபுரம் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

இதனை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

350 மீற்றர் உயரம் மற்றும் 17 அடுக்குகளை கொண்ட தாமரை கோபுரமானது 104 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதில் 80 சதவீதமான நிதியை சீனா முதலீடு செய்துள்ளது.

இதன் கையளிப்பு நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka