சிங்கள வாக்குகளை மட்டும் நம்பியவர் தோற்பாரா? » Sri Lanka Muslim

சிங்கள வாக்குகளை மட்டும் நம்பியவர் தோற்பாரா?

vote

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.L.Thavam

👉🏿 இலங்கையின் தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16,000,000 (ஒரு கோடியே அறுபது இலட்சம்) .

👉🏿 இதில் சிறுபான்மை 25%. அதாவது 4,000,000 (நாற்பது இலட்சம்) வாக்குகள் சிறுபான்மைக்குரியது.

👉🏿 சிறுபான்மை வாக்குகளை தவிர்த்து பெரும்பான்மை (சிங்கள) வாக்குகள் 12,000,000 (ஒரு கோடியே இருபது இலட்சம்).

👉🏿 இலங்கை ஜனாதிபதியாக வருபவர் அளிக்கப்படும் வாக்குகளில் 50%+ யை பெற வேண்டும்.

👉🏿 தனி சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி களமிறங்கினால் – அவர் வெற்றி பெற – சிங்கள வாக்குகளில் சுமார் 66% யினை பெற வேண்டும்.

✍🏿 2010 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் வாக்களிக்காமல் யுத்த வெற்றியின் பின்னரான உச்ச கட்டத்திலும் மகிந்தவால் பெறக்கூடியதாக இருந்தது வெறும் 57.88% மாத்திரமே.

✍🏿 மஹிந்தவிற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டில் சிறுபான்மை மக்கள் பெருமெடுப்பில் வாக்களித்தும் சிங்கள வாக்குகளையும் சேர்த்து சந்திரிக்காவால் பெற்றுக்கொள்ள முடிந்தது 62.28% மாத்திரமே.

✍🏿 இந்த இரண்டு உதாரணங்களும் இலங்கை அரசியலில் மிக முக்கியமானவையாகும்.

👉🏿 அன்று மகிந்தவின் உச்சக்கட்டத்தில் (2010) பெற்ற வாக்குகளை விட அதிக வீத வாக்குகளை பெறுமளவு ஒரு அதிசயமும் இன்று இலங்கையில் நடக்கவில்லை.

👉🏿 அதேநேரம்,பெருமெடுப்பிலான சிறுபான்மை மற்றும் சிங்களவர்களின் அமோக ஆதரவை பெற்ற சந்திரிக்காவாலேயே 66% எட்ட முடியவில்லை.

அந்த வகையில் இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் கோட்டாவிற்கு சிறுபான்மை வாக்குகள் பாரியளவில் இல்லை. அவர் கொள்கையளவில் அதற்கான இணக்கங்களை ஏற்படுத்த தவறியுள்ளார். சிங்கள வாக்குகளை மட்டும் இலக்கு வைக்கிறார். இவரால் சிங்கள வாக்குகளில் 66% யை பெற முடியாது. JVP தனித்து போட்டியிடுவது UNP யை விட சிங்கள வாக்குகளில் மாத்திரம் குறிவைத்திருக்கும் கோட்டாவிற்கே தலையிடி.

ஐக்கிய தேசிய கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அறிவிக்கப்படும் வேட்பாளர் சிங்கள வாக்குகளில் மட்டும் குறிவைத்தால் அவரும் சிங்கள வாக்குகளில் 66% பெற முடியாமல் தோற்பார். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மையினரின் ஆதரவு பற்றி அதிகம் பேசுவதை அவதானிக்கலாம். பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இது அனுபவ கணக்கு. புரியக்கூடியவர்களுக்கு மட்டுமானது.

Web Design by The Design Lanka