முஸ்லிம் தலைமைகளின் பேரம் பேசல் என்ன? » Sri Lanka Muslim

முஸ்லிம் தலைமைகளின் பேரம் பேசல் என்ன?

party

Contributors
author image

Editorial Team

இது ஒரு இக்கட்டான காலகட்டம்.
முஸ்லிம் கட்சிகளுடன் பகிரங்கமான பேச்சுவார்த்தை நடத்துவதிலோ உடன்பாட்டுக்கு வருவதிலோ எந்த வேட்பாளரும் நாட்டம் காட்டவில்லை.
நாட்டம் காட்டவும் மாட்டார்கள்.
நாட்டு சூழல் அப்படித்தான் இருக்கின்றது..

இரண்டு காங்கிரஸ்களும் UNP யிலிருந்து பிரிக்க முடியாத பிணாமிகளை தலைவர்களாய் கொண்டிருப்பதும் காரணம்தான்.

வழமைக்கு மாற்றமாக இந்த தேர்தலில் முஸ்லிம் கட்சிகளை அணுகுவதைவிட முஸ்லிம் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு தேடுவதிலேயே வேட்பாளர்கள் அதிகம் நாட்டம் காட்டுகின்றார்கள்.

அமைச்சுப்பதவிகளையும் ,தேசிய பட்டியலையும், பண மூட்டைகளையும் கொடுத்து அலுத்துப்போனதுடன் முஸ்லிம் கட்சிகள் நாட்டை துவம்சம் செய்யும் கட்சிகளாய் இன்றுகளில் பார்க்கப்படுவதும் இன்னும் சில காரணங்களாகும்.

தமிழ் கட்சிகள் மீதான பார்வை வித்தியாசமானது.

சஜித் பிரேமதாஸா TNA யுடன் பேசினார்
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஏனெனில் அவர்கள் அமைச்சுப்பதவிகள் போன்ற மலிவான விடையங்களை கேட்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் உள்ளக சுயநிர்னய அதிகாரத்துடனான சுயாட்சியை அங்கீகரிக்கும் புதிய அரசியலமைப்பை வலியுறுத்தினர்.
ஏற்றுக்கொள்வதில் சஜித் ஆர்வம் காட்டவிலை.

சுமந்திரன் சஜித்தை அரசியல் கொலை செய்வதற்கு காய்களை நகர்த்துகின்றார்.
சஜித்தையே வேட்பாளராக்குவோம் என ரணிலே விரும்பினாலும்கூட சுமந்திரனின் பிடி தளராது.
சஜித்தும் லேசுபட்டவரல்ல.
அதை விடுவோம்
விடையத்துக்கு வருவோம்

முஸ்லீம் கட்சிகளுக்கு சஜித்தே கதியாகிவிட்டது.
ஒன்று மட்டும் புரிகிறது
முஸ்லிம் கட்சிகள் வழமைபோல் அமைச்சுக்களையும் தேசிய பட்டியல்களையும் பணமூடைகளையுமே கேட்டிருக்கின்றன.
முஸ்லிம்களின் பாதுகாப்பு, மத,கலாச்சார, பண்பாட்டுச் சுதந்திரங்கள் போன்ற எந்த முக்கியமான விடையங்களையும் வலியுறுத்தவில்லை.

மர்ஹூம் அஷ்ரஃபினால் சமூகத்துக்கான பேராயுதமாக அறிமுகப்படுத்தப்பட்ட பேரம் பேசுதலை தனிநபர்களுக்கான வியாபாரமாக்கிய முஸ்லிம் கட்சி தலைமைகளை முற்றாக நிராகரிக்கும் இறுதித்தேர்தலாக இது அமையலாம்.
அமைய வேண்டும்.

‘பொது நாடு’, பொது சட்டம்’ என்ற பரந்த கொள்கையுடன் இயங்கும் ‘தேசிய மக்கள் சக்தி’யை ஆதரிப்பதினூடாக பாதுகாப்பானதும் சம அந்தஸ்தும் கொண்ட கௌரவமான இருப்பை உறுதிப்படுத்துவோம்!

அமைச்சுப்பதவிகளுக்கும்,தேசிய பட்டியலுக்கும், பணமூடைகளுக்கும் எமது பெறுமதியான வாக்குகள் அடமானம் வைக்கப்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

-வஃபா பாறுக்-

Web Design by The Design Lanka