நிறைவேற்று ஜனாதிபதி முறை - ஒழிக்கும் நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி » Sri Lanka Muslim

நிறைவேற்று ஜனாதிபதி முறை – ஒழிக்கும் நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி

IMG_20190923_103017

Contributors
author image

Editorial Team

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக நேற்று இதுவிடயம் குறித்த அறிக்கை ஒன்றை அலரி மாளிகையில் பிரதமர் விடுத்துள்ளார்.
அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளும்படி இந்த பிரதிநிதிகள் தம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர்
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த சிவில் சமூக பிரதிநிதிகள் தம்மிடம் இதுவிடயம் குறித்த பிரேரணை ஒன்றை கையளித்தனர் ஏனைய கட்சிகளின் ஆதரவு இன்றி 20ஆவது திருத்தம் சாத்தியப்படாது என்று பிரதமர் இதன் போது தெரிவித்தாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எனவே ஏனைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து அதுபற்றி தம்மிடம் அறிவிக்கும்படி சிவில் சமூக பிரதிநிதிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

நிறைவேற்று முறையை ஒழிப்பது குறித்து ஜே.வி.பி உடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 17ம் திகதி என்னிடம் கூறினார்.
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதெனில், பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்திருந்தார்.. அந்த அறிக்கையை யாரும் நிராகரிக்கவில்லை.
19ம் திகதி காலை 8.16 மணிக்கு ஜனாதிபதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 20ஆது திருத்தம் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை அழைக்கலாமா என்று அவர் என்னிடம் கேட்டார்.

இதற்காக சிவில் சமூகம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளதாக நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். இந்த விடயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்தும் சுமந்திரன் எனக்குத் தெரிவித்திருந்தார். எனவே, அமைச்சரவையை அழைத்து விவாதிப்பது பொருத்தமானது என்று ஜனாதிபதியிடம் நான் தெரிவித்தேன் என பிரதமர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka