திருமணமாகாத வெளிநாட்டு ஜோடிகள் இனி சௌதி விடுதிகளில் தங்கலாம் » Sri Lanka Muslim

திருமணமாகாத வெளிநாட்டு ஜோடிகள் இனி சௌதி விடுதிகளில் தங்கலாம்

IMG_20191006_084837

Contributors
author image

BBC

சௌதியில் அரேபியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசா நடைமுறைகளின்படி, வெளிநாடுகளை சேர்ந்த திருமணமாகாத ஜோடிகள் அந்நாட்டின் விடுதிகளில் இனி தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னெப்போதுமில்லாத வகையில் பெண்கள் மட்டும் தனியே விடுதிகளில் தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு வரை ஜோடிகள் தங்களது திருமணத்தை தக்க ஆவணங்கள் மூலம் நிரூபித்த பிறகுதான் விடுதி அறைகளில் தங்க முடியும்.

சௌதி அரேபியாவில் சுற்றுலாத்துறையை ஊக்கப்படுவதற்காக அந்நாட்டின் விசா நடைமுறையில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், நாடு முழுவதும் மதுபானம் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka