கொழும்பு டி.எஸ். கல்லூரியில் நாஸிப் அஹமட் முதலாம் இடம் » Sri Lanka Muslim

கொழும்பு டி.எஸ். கல்லூரியில் நாஸிப் அஹமட் முதலாம் இடம்

IMG_20191006_202938

Contributors
author image

Editorial Team

இன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு டி.எஸ். கல்லூரியை சேர்ந்த  மாணவன் நாஸிப் அஹமத் ,185 புள்ளிகளைப் பெற்று தமிழ் பிரிவில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

இவர் மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த முகம்மட் நஸீம், ஸீனத்துள் நுதுபினா  தம்பதியினரின் அன்புப் புதல்வராவார்.

திறமையாக கல்விகற்கும் நாஸிப் அஹமத், தமிழ் பிரிவில் முதல் இடத்தைப் பெற்று தமிழ் பேசும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.

இவரது கல்விப் பயணம் எதிர்காலத்தில் மென்மேலும் உயரவும் உயர் கல்வியில் சிறந்து விளங்கவும் நாமும் வாழ்த்தி பிரார்த்தனை செய்வோம்.

Web Design by The Design Lanka