கோட்டாபய 65 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றிப்பெறுவார் » Sri Lanka Muslim

கோட்டாபய 65 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றிப்பெறுவார்

IMG_20191007_101525

Contributors
author image

Editorial Team

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 65 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றிப்பெறுவார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மோதர ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிலின் வருடாந்த தேர் உற்சவம் நேற்று முன்தினம் (05) இடம்பெற்ற நிலையில் அதில் எதிர்க் கட்சித் தலைவர் கலந்துக்கொண்டு ஆசிபெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´கோட்டாபய தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய அவர் போட்டியிட்டு வெற்றிப் பெறுவார்.

எமக்கும் எதிர்தரப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனாலும் நாம் அவ்வாறு செய்ய போவதில்லை. வெற்றி பெற வேண்டுமால் மக்கள் மத்தியில் சென்று வெற்றிப்பெற வேண்டும். மாறாக நீதிமன்றத்தை நாடி வெற்றி வெற்றியை ஈட்ட முடியாது.

மக்கள் பிரச்சினைகளை மக்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். தோல்வியடைய போகின்றோம் என்பதால் எதிரணி கடும் அச்சத்தை எதிர்க் கொண்டுள்ளது.

சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடமாட்டார். நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கையிருந்த போதிலும் இரண்டாவது தெரிவாகவே நாம் அவரை கட்டுப்பணம் செலுத்த வைத்தோம். காரணம் இது மக்களின் பிரச்சினை மாறாக எனது தனிப்பட்ட பிரச்சினை கிடையாது´ என்றார்.

Web Design by The Design Lanka