தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை » Sri Lanka Muslim

தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை

IMG_20191007_101757

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பல பணிப்பகிஷ்கரிப்புக்கள் வேட்புமனு அறிவிப்பிற்கு முன்னரும், வேட்புமனு அறிவிப்பிற்கு பின்னரும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில கைவிடப்பட்டுள்ளன. எனினும் ரெயில்வேயின் சில தொழிற்சங்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு அரச ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்ற காரணத்தால் தொழிற்சங்கப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறும், தேர்தல் காலத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka