வாக்குசீட்டின் நீளம் 26 அங்குலம் » Sri Lanka Muslim

வாக்குசீட்டின் நீளம் 26 அங்குலம்

election

Contributors
author image

Editorial Team

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக, தேர்தல் செலவீனங்கள் எதிர்பார்த்தைவிட  அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, வாக்குகளை எண்ணும் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை 70 இல் இருந்து 175ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குசீட்டின் மாதிரி, அரசாங்க அச்சகத்தால் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி,  வாக்குசீட்டின் நீளம் 26 அங்குலமாக காணப்படுவதாக அந்த அறிக்கையில்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

  • அத்துடன்,  வாக்கெடுப்பு நிலையத்துக்கான ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன், மின்சாரம், தொலைபேசி, போக்குவரத்து நீர் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by The Design Lanka