78 ஆயிரம் கோடி பணத்தை மிச்சப்படுத்த இத்தாலி என்ன செய்திருக்கிறது தெரியுமா? » Sri Lanka Muslim

78 ஆயிரம் கோடி பணத்தை மிச்சப்படுத்த இத்தாலி என்ன செய்திருக்கிறது தெரியுமா?

IMG_20191009_085259

Contributors
author image

BBC

கணிசமான அளவுக்குச் செலவைக் குறைக்க இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது இத்தாலி. இதற்குச் சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

78 ஆயிரம் கோடி பணத்தை மிச்சம் செய்ய இத்தாலி எடுத்த முடிவு என்ன தெரியுமா?படத்தின் காப்புரிமைEPA

இத்தாலி கீழ் அவையில் இப்போது 600 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 400ஆகக் குறைகிறது. அதுபோல செனட்டர்கள் எண்ணிக்கை 315லிருந்து 200ஆகக் குறையும். இதனை தம் தேர்தல் வாக்குறுதியாகக் கூறி இருந்தது ஃபைவ் ஸ்டார் இயக்கம். இது இப்போது ஆளுங்கட்சி கூட்டணியில் முக்கிய அங்கன் வகிக்கிறது. இதன் மூலமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ஈரோ பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறது அக்கட்சி.

ஆனால், இது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் செயல் என்கிறார்கள் விமர்சகர்கள்.

Web Design by The Design Lanka