இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “அதிக வேட்பாளர்கள், அதிநீளமான வாக்குச்சீட்டு” - 10 சுவாரஸ்ய தகவல்கள் » Sri Lanka Muslim

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “அதிக வேட்பாளர்கள், அதிநீளமான வாக்குச்சீட்டு” – 10 சுவாரஸ்ய தகவல்கள்

IMG_20191009_122912

Contributors
author image

BBC

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் திங்கள்கிழமையுடன் (அக்டோபர் 7) நிறைவு பெற்றுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முறைமை அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் இதுவரை 7 ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பிரதமர் ஆட்சியாக காணப்பட்ட இலங்கையின் ஆட்சி முறை, 1978ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்டது.

இதன்படி, கடந்த 7 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுப்பட்ட, பலரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ள ஒரு தேர்தலாக மாற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 முக்கிய விடயங்கள்.

  • ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.
  • இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)
  • அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)
  • அதிநீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)
  • இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)
  • வாக்குபெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.
  • 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)
  • இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)
  • ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.
  • சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல். (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன.)

Web Design by The Design Lanka