முறைகேடான சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க மின்னஞ்சல் முகவரி » Sri Lanka Muslim

முறைகேடான சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க மின்னஞ்சல் முகவரி

email

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக ஊடகங்களை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கண்காணிப்பதற்கு தேவையான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் மின்னஞ்சல் முகவரி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் முகவரி Per.itssl@gmail.com என்பதாகும். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்கள் ஆகியன ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் எதிர் கொள்ளக்கூடிய முறைகேடான சமூக ஊடக பயன்பாடு குறித்த தகவல்களை மின்னஞ்சல் மூலம் தமது சங்கத்திற்கு தெரிவிக்க முடியும் என்று அந்த சங்கத்தின் தலைவர் ரஜீவ் ஜசிறு குருவிட்டகே மெத்தியு தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் பொழுது முறைப்பாட்டிற்கான screenshots மற்றும் அதற்கான link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புவதன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியம் என்றும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by The Design Lanka