ஓய்வுபெற்ற பின்னரும் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிக்க அனுமதி » Sri Lanka Muslim

ஓய்வுபெற்ற பின்னரும் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிக்க அனுமதி

IMG_20191016_124128

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

கொழும்பு7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka