கிண்ணியா தள வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் இடவசதி போதமை அசௌகரியங்கள். » Sri Lanka Muslim

கிண்ணியா தள வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் இடவசதி போதமை அசௌகரியங்கள்.

hos1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கிண்ணியா தள வைத்திய சாலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் இடவசதி போதாமையினால் பல் வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

இத்தகைய நிலமைகளை தவிர்ப்பதற்கு முடிந்தளவு உத்திகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா தள வைத்திய சாலை வைத்திய அத்தியகட்சகர் டொக்டர் சதீஸ் குமார் தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தளவில் அதிகளவு பிள்ளைகள் பெறும் இடம் திருகோணமலை மாவட்டமாகவும், திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவில் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளும் இடமாக கிண்ணியா முக்கிய இடம் வகிப்பதாகவும் தெரிவித்தார்.

கிண்ணியா தள வைத்திய சாலையில் பிரவத்திற்காக நாளொன்றுக்கு 12 தொடக்கம் 15 வரை பிரவசவத்திற்கு அனுமதிக்கப் படுவதாகவும் இதற்காக சிறியதோர் வார்ட்டில் 11 கட்டில் மாத்திரமே உள்ளதாகவும் ஏனையோர் கதிரையில் வைக்கப் பட்டும் தரையிலே தூங்க வைப்பதாகவும் பின்னர் ஒவ்வொருவராக வெளியேறும் போது அவர்களுக்கு இடங்களை வழங்கி பிரசவம் இடம் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் சனத் தொகை கொண்ட இப்பிரதேசத்தில் இடவசதி போதாமையினால் இந் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மற்றும் வைத்திய சாலை அபிவிருத்தி சங்கம் இணைந்து அபிவிருத்தி மேற் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka