வாக்களிப்பு வீதம் 85 சதவீதமாக அதிகரிக்ககூடும் » Sri Lanka Muslim

வாக்களிப்பு வீதம் 85 சதவீதமாக அதிகரிக்ககூடும்

ELECTION

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதித் தேர்தலின் சகல பெறுபேறுகளையும் அடுத்த மாதம் 18 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியளவிலேயே வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய தேர்தலின் வாக்களிப்பு உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாக தெரிவித்த அவர் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 தொடக்கம் 85 சதவீதமாக அமையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் வாக்களிப்பதற்காக நாடு திரும்பும் வாய்ப்பும் காணப்படுகிறது என்றும் தெரிவித்தார். சில அரச ஊடக நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பக்கசார்பான செய்திகள் குறித்தும் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்தார்.

அரசாங்க ஊடக நிறுவனம் ஒரு கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும். இது தொடர்பில் அரச ஊடக நிறுவனங்கள் உரிய வகையில் செயற்படாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரச ஊடக நிறுவனத்தை முறைகேடு எச்சரிக்கை இது ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். அரச ஊடக நிறுவனங்கள் உரிய முறையில் செயற்படாவிட்டால் சிவில் அமைப்புக்கள் மற்றும் சில பிரஜைகள் அது தொடர்பில் வழக்கு தொடர்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தமக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை தபால் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு அரச அச்சக பிரவு தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்த அவர் சில ஊடக நிறுவனங்கள் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலம் குறித்து ஆணையாளர் சில விடயங்களை குறிப்பிட்டார்.

சில ஊடக நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செய்தி ஒலிபரப்பு காலப்பகுதிக்குள் ஒதுக்கப்படும் அலைவரிசைக் காலம் தொடர்பிலும் அறிக்கை ஒன்றை வாராந்தம் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொழுது சமநிலையுடன் செயற்படவேண்டும் என்று தனியார் ஊடகங்களை தாம் மீண்டும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுதல், வேட்பாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குதல் மற்றும் தனிப்பட்ட தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பயன்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடுவதற்கு தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்த அவர் இந்த அறிவிப்பில் புள்ளடிக்கு பதிலாக இலக்க முறையை பயன்படுத்தும் முறை குறித்து இதில் தெளிவுபடுத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Web Design by The Design Lanka