ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு » Sri Lanka Muslim

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் உயிரிழப்பு

IMG_20191019_101712

Contributors
author image

BBC

ஆப்கானிஸ்தானில்  வெள்ளிக்கிழமை மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததில் 62 பேர் உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் மேற்கூரை தகர்ந்து விட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்புபடத்தின் காப்புரிமைREUTERS

ஆப்கானிஸ்தானில் கடந்த கோடைகாலத்தின்போது, தாக்குதல்களினால் உயிரிழந்த பொது மக்களின் எண்ணிக்கை முன்னெப்போதுமில்லாத அளவை அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த அடுத்த நாளே இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 1,174 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா கூறுகிறது.

இது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஐ.நா. இதுகுறித்த பதிவுகளை மேற்கொள்ள தொடங்கியதில் இருந்து பதிவாகியுள்ள மிகவும் மோசமான காலாண்டாகும்.

Web Design by The Design Lanka