மிஃப்லால் மௌலவியிடம் விசாரணை » Sri Lanka Muslim

மிஃப்லால் மௌலவியிடம் விசாரணை

IMG_20191026_091153

Contributors
author image

Editorial Team

சஹரான் ஹசீமுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நிலவிய தொடர்பு குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மிஃப்லால் மௌலவி இன்று பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சஹரான் ஹசீமுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படும் கலந்துரையாடல் தொடர்பான காணொளியை கடந்த 18 ஆம் திகதி முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு பகிரங்கப்படுத்தியது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மிஃப்லால் மௌலவி நேற்று (25) குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உதவி மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர் என பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

Web Design by The Design Lanka