மாதிரி வாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம் » Sri Lanka Muslim

மாதிரி வாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம்

election2

Contributors
author image

Editorial Team

தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு அதன் பெறுபேறுகள் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் சட்டத்திற்கு அமைவாக தண்டக்குரிய குற்றமாகும்

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றமைதெரியவந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் பெறுபேறுகள் சமூகவலத்தளங்களிலும் வெளியிடப்படுகின்றன. இவை ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்குமுரணானதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இதனால் இவ்வாறான மாதிரிவாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு உரிய தரப்புக்களுக்குஅறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka