அமெரிக்க படை நடத்திய தாக்குதில் ISIS தலைவர் பலி? » Sri Lanka Muslim

அமெரிக்க படை நடத்திய தாக்குதில் ISIS தலைவர் பலி?

usa

Contributors
author image

Editorial Team

சிரியாவில் அமெரிக்க  அதிபடை நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வருகிறது.

சிரியாவில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா தனது படையில் பாதியை வாபஸ் பெற்றுக்கொண்டது. அதன்பின் சிரியாவில் குர்து படைகளுக்கும் துருக்கி படைக்கும் இடையில் சண்டை நடந்தது.

இதனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பு வேகமாக வளரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக சிரியாவில் மறைந்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி சிஐஏ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்க படை அவரை கொலை செய்துவிட்டதாக தகவல்கள் வருகிறது.

Web Design by The Design Lanka