நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு » Sri Lanka Muslim

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

IMG_20191027_105927

Contributors
author image

Editorial Team

தென்கிழக்கு கடற்பரப்புகளில் காணப்படும் கீழ் மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக,மாத்தறையிலிருந்து மட்டக்களப்புமற்றும் திருகோணமலைஊடாக காங்கேசந்துறை வரையானகடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..  

, வளிமணடலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ,. திடீரென்று கடல் கொந்தளித்தல் மற்றும்காற்றின் வேகமானது அவ்வப்போது 70-80 கிலோமீற்றர் வரை திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்கு, தெற்கு மற்றும்கிழக்காக காணப்படும் ஆழம் கூடிய மற்றும்ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது..

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka