பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் » Sri Lanka Muslim

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

IMG_20191029_133007

Contributors
author image

Editorial Team

விவசாயத்தின் மேம்பாட்டிற்காக விவசாயியைப் பாதுகாத்துக் கொள்ள தெளிவான கொள்கை ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்ட பிரசார கூட்டம் ஒன்று கந்தளாய் பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும்.

அதனால்தான் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய நான் முன்மொழிந்தேன்.

நாட்டைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களின் மனநிலையை தற்போதைய அரசாங்கம் சிதறடித்துள்ளது.

நாட்டை அபிவிருத்து செய்ய வேண்டுமானால் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

Web Design by The Design Lanka