சதியை மதியால் வெல்லும் கல்விமான் பேராசிரியர் நாஜிம் » Sri Lanka Muslim

சதியை மதியால் வெல்லும் கல்விமான் பேராசிரியர் நாஜிம்

naajim6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Abdeen Subaideen


தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு கொழும்பில்  சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் 13 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டி உள்ளார்..

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் அடுத்த மூன்று வருடங்களுக்கு உப வேந்தராக கடமையாற்றுவதற்கு உப வேந்தரைத் தெரிவு செய்யும் முகமாக இடம் பெற்ற தேர்தல் அல்லது தெரிவு முடிவுகள் பின்வருமாறு

பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் – 13 வாக்குகள்
கலாநிதி றமீஸ் அபூபக்கர் – 11 வாக்குகள்
கலாநிதி ஏ.எம். றஸ்மி – 10 வாக்குகள்
கலாநிதி ஏ.எம். மஜீட் – 07 வாக்குகள்
பேராசிரியர் ஹன்சியா றஊப் – 05 வாக்குகள்.

இதன்போது, பேராசிரியரின் நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட சிலரின் சதி முயற்சியின் தொடர் விளைவாக பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று, அங்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர் என சொல்லப்படுகின்றது.

முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு எதிராகவே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.

முன்னாள் உபவேந்தர் நாஜிமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மீண்டும் தெரிவு செய்யக் கூடாது என்றும், அவர் உபவேந்தராகத் தெரிவானால் பல்கலைக்கழகம் மோசமானதொரு நிலைக்குச் சென்று விடும் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கு கோசம் எழுப்பியுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே வாக்களிப்பு நிறைவுபெற்றுள்ளமையும் பேராசிரியர் அதில் முன்னிலை வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் நாஜிம் அவர்களை மீண்டும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சிபாரிசு செய்து நியமிக்க வாய்ப்பளிக்கப்படலாம் என சொல்லப்படுகின்றது.

Web Design by The Design Lanka