இறக்காமத்திற்கு அமைச்சர் ரிசாட் வருகின்றார். » Sri Lanka Muslim

இறக்காமத்திற்கு அமைச்சர் ரிசாட் வருகின்றார்.

IMG_20191106_090142

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Sumsudeen Aroos

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்கள் இன்று மாலை (புதன்கிழமை -06) இறக்காமத்திற்கு வருகை தரவுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளரும், தொழிலதிபருமான நௌபர் மௌலவி தலைமையில் இடம்பெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

இப்பொதுக்கூட்டம் மாலை4.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை இறக்காமம் ஆலையடிச்சந்தியில் நடைபெறவுள்ளது.

IMG_20191106_090142

Web Design by The Design Lanka