வழக்கு ஒத்திவைப்பு » Sri Lanka Muslim

வழக்கு ஒத்திவைப்பு

Contributors
author image

Editorial Team

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைbasilக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல, நேற்று (05) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான 365 இலட்சம் ரூபாய் பணத்தை செலவிட்டு GI குழாய்களை கொள்வனவு செய்து, அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் நோக்குடன் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka