அனைத்தும் தனது நிர்வாக காலத்தினுள் நிறைவேற்றப்படும் » Sri Lanka Muslim

அனைத்தும் தனது நிர்வாக காலத்தினுள் நிறைவேற்றப்படும்

IMG_20191106_151318

Contributors
author image

Editorial Team

தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் அனைத்தும் தனது நிர்வாக காலத்தினுள் நிறைவேற்றப்படும் என உறுதியளிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடுகன்னாவை சுனில் எஸ்.அபேசுந்தர மைதானத்தில் நேற்று (05) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டத் துறை தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மிகப்பெரிய அந்நிய செலாவணியை இந்நாட்டுக்கு பெற்றுத்தரும் தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பெருந்தோட்ட பயிர்ச்செய்கை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் கீழ் விவசாயத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka