டெல்லியின் வாயு மாசுபாட்டால் கொழும்பிலும் பாதிப்பு » Sri Lanka Muslim

டெல்லியின் வாயு மாசுபாட்டால் கொழும்பிலும் பாதிப்பு

IMG_20191106_151800

Contributors
author image

Editorial Team

கொழும்பு நகரின் வாயு மாசுபாடு சாதாரண நிலையை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் டெல்லி நகரத்தில்  வாயு மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக கொழும்பில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக  தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையின் மூத்த ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லி நகரத்தில்  வாயு மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் அந்த நகரை அண்மித்த பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பான அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். Tm

Web Design by The Design Lanka