தபால்மூலம் வாக்களிக்க இறுதி சந்தர்பம் இன்று » Sri Lanka Muslim

தபால்மூலம் வாக்களிக்க இறுதி சந்தர்பம் இன்று

votes

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே தபால்மூல வாக்களிக்க தவறிய சகல அரச ஊழியர்களும் இன்று (07) வாக்களிக்க சந்தப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை தாபல்மூலம் வாக்களிக்க தவறிய சகல அரச ஊழியர்களும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாக்களிக்க இன்று காலை 7 மணி முதல் 4 மணி வரை சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த மாதம் 31 திகதியும், இந்த மாதம் 1 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றன.

ஆகவே, குறிப்பிட்ட அந்தந்த தினங்களில் வாக்களிக்க தவறிய தபால்மூல வாக்களர்களுக்கு இன்று இறுதி சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால்மூலம் வாக்களிக்க இம்முறை 6 இலட்சத்து 59 ஆயிரத்து 317 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Web Design by The Design Lanka