கோட்டாவின் வெற்றிக்காக 70 இடங்களில் பூஜை » Sri Lanka Muslim

கோட்டாவின் வெற்றிக்காக 70 இடங்களில் பூஜை

IMG_20191107_095426

Contributors
author image

Editorial Team

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக, ஸ்ரீ விஷ்ணு தேவ ஆசிர்வாத பூஜை, எதிர்வரும் 09 ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, அன்றைய தினம் காலை 7.00 மணி தொடக்கம் பி.ப 12.00 மணி வரை, நாடளாவிய ரீதியில் 70 இடங்களில் இந்த பூஜை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி எச்.எம்.எச்.ஏ. ஹேரத் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனரென, அவர் தெரிவத்தார்.

பிரதான பூஜை நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் பங்கேற்கவுள்ளனரெனவும் தெரிவித்தார்.

மேலும், பூஜை நிகழ்வு தொடர்பான மேலதிக விவரங்களை அறிய 077-635149 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமென,  அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka