புலனாய்வாளர்கள் 07 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் » Sri Lanka Muslim

புலனாய்வாளர்கள் 07 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்

IMG_20191108_102055

Contributors
author image

Editorial Team

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், இராணுவப் புலனாய்வு பிரிவின் 07 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரால் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நேற்று (07) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடாத சிலரால் கிரிதலே, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் அடைத்து வைக்கும் நோக்குடன், பிரகீத் எக்னெலிகொடவை கடத்துவதற்கு சதி முயற்சியில் ஈடுபட்டமை , அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் ஷம்மி அர்ஜுன் குமாரரத்ன, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் பிரபோத சிறிவர்தன உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவின் 7 பேருக்கு எதிராகவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka