ஊடக விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை » Sri Lanka Muslim

ஊடக விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

election2

Contributors
author image

Editorial Team

ஊடக விதிமுறைகளை மீறும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் குறித்த தரப்பினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செயல்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளர் பாராட்டினார்.

இதேவேளை, 13ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சகல பிரசார நடவடிக்கைகளும் நிறைவடைவதாகவும், பிரசாரக் கூட்டங்களில் வேட்பாளர்கள் தெரிவித்த கருத்துக்களை 14ஆம் திகதி வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka