எவ்வித உண்மைகளும் இல்லை » Sri Lanka Muslim

எவ்வித உண்மைகளும் இல்லை

mai

Contributors
author image

Editorial Team

தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான சிலருடன் ஜனாதிபதி கலந்துரையாடல் நடத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஜனாதிபதி தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான சிலருடன் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதாகவும், கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் மேற்கொண்ட சில தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதி இதன்போது கவலை தெரிவித்ததாகவும், நவம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த அனைத்து விடயங்களையும் மக்களுக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை.

மேலும் எந்தவொரு தரப்பினரும் தேர்தலின் இறுதி சில நாட்களுக்குள் ஜனாதிபதி சம்பந்தமாக இத்தகைய போலியான செய்திகளை உருவாக்கி பிரச்சாரம் செய்வது குறித்து ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Web Design by The Design Lanka