சந்திரிக்காவுக்கு பைத்தியம் இல்லையென்றால்.... » Sri Lanka Muslim

சந்திரிக்காவுக்கு பைத்தியம் இல்லையென்றால்….

IMG_20191113_134924

Contributors
author image

Editorial Team

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

மினுவன்கொடை மத்திய நகரில் நேற்று (12) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர், சந்திரிக்கா மூன்று முறை ´பிரபாகரன் சேர்´ என்று கூறியுள்ளதாக நேற்று தமிழ் பத்திரிக்கை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்தாக தெரிவித்தார்.

” ஒன்று அவருக்கு பைத்தியம், இல்லையென்றால் எமக்கு பைத்தியம்” என தெரிவித்த மஹிந்த, பிரபாகரன் சேர் என்று கூறுவதன் மூலம் அவர் பிரபாகரன் கோரியதை பிரேமதாசவின் ஊடாக பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, இலங்கையில் திருமணத்தின் பின்னர் குழந்தைகளில் இன்றி அநேகமான தம்பதிகள் இருப்பதாக தெரிவித்த அவர், அவர்கள் குழந்தை பேருக்காக வௌிநாடு செல்ல பணம் இல்லாமல் இருப்பதாகவும், அவ்வாறானவர்களுக்காக இலங்கை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka