தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய சகல தரப்பினருக்கும் நன்றி - பிரதமர் » Sri Lanka Muslim

தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய சகல தரப்பினருக்கும் நன்றி – பிரதமர்

ranil

Contributors
author image

Editorial Team

மிகவும் அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் தேர்தலை நடத்த முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஊடகங்கள் மத்தியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்நின்று நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும், முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் அரச ஊழியர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அரசியல் யாப்பின் மீதான 19 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சூழல், தேர்தல் வாக்கெடுப்பை சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடத்த வழிவகுத்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka