வெற்றி பெற்ற வேட்பாளரை இன்று அறிவிப்பதற்கான சாத்தியம் » Sri Lanka Muslim

வெற்றி பெற்ற வேட்பாளரை இன்று அறிவிப்பதற்கான சாத்தியம்

IMG_20191114_104840

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் யார் என்பதை இன்று மாலை 4.00 மணிக்கு முன்னர் அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்று முன்னர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் இன்னும் 1 மணித்தியாலத்திற்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இது வரையில் ஒரு கோடி 9 இலட்சம் வாக்குகள் எண்ணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற 2019 ஜனாதிபதி தேர்தல் – 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 80 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர். விரைவாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற சீரற்ற காலநிலையினால் வாக்குள் எண்ணும் பணி தடைப்பட்டது என்று தெரிவித்த அவர் இன்று பிற்பகல் 3.00 மணிக்கும் 4.00 மணிக்கும் இடையில் வெற்றி பெற்ற வேட்பாளரை அறிக்கக்கூடிதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இந்த முடிவுகளில் சில நேரம் தாமதம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Web Design by The Design Lanka