கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற இடம் » Sri Lanka Muslim

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற இடம்

IMG_20191120_150929

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Giritharan

அண்மையில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற இடம் என்பதால் மீண்டும் அனைவர்தம் கவனத்தையும் கவர்ந்துள்ள கட்டடம் ரூவன்வெலிசாய தூபி, இது மகா தூபி என்றும் அழைக்கப்படும்.

அநுராதபுரத்திலிருந்து இலங்கையை அரசாண்ட சோழ மன்னன் எல்லாளனைப் போரில் வெற்றிகொண்டபின்னர் இலங்கையின் அரசனான துட்டகாமினியால் (துட்டகைமுனு) கட்டப்பட்ட தூபி இது.

கட்டப்பட்ட காலம் கி.மு..140. போரில் எல்லாளனை வென்ற பின்னர் துட்டகாமினி எல்லாளனுக்கு உரிய மரியாதை செய்தான். எல்லாளனுக்குச் சமாதியொன்றையும் அமைத்தான்.

இன்று இம் மகா தூபி பெளத்தர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதக் கட்டடங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தற்போதுள்ள இக்கட்டடத்தின் வடிவம் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வடிவம்.

இக்கட்டடத்தை யாழ்தேவியில் கொழும்பு செல்லும் எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. அநுராதபுரத்தைப் புகையிரம் கடக்கையில் மூன்று தூபிகள் அநுராதபுர நகரின் விண் பரப்பில் தெரியும். அவை அபயகிரி, ஜீத்தவனாராம அடுத்தது பால் போன்ற வெண் நிறத்தில் கண்ணைக்கவரும் ரூவன் வெலிசாயா தூபி.

Web Design by The Design Lanka