69 புதிய எம்பீக்கள் ஓய்வூதியத்திற்கு தகுதி » Sri Lanka Muslim

69 புதிய எம்பீக்கள் ஓய்வூதியத்திற்கு தகுதி

IMG_20191121_125424

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 

— ஏ.எச்.எம். பூமுதீன்

பாராளுமன்றம் 4 1/2 வருடம் பூர்த்தியானதன் பின்னரே கலைக்கப்படவிருப்பதால் புதிதாக தெரிவான 69 எம்பீக்கள் ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஜ.தே.க. சார்பில் 41 பேரும் – ஜ.ம.சு.கூ. சார்பில் 18 பேரும் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 8 பேரும், ஜே.வி.பி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் அடங்குகின்றனர்.

எம்பி ஒருவரின் அடிப்படைச் சம்பளத்திற்கு இணங்க ஓய்வூதியத் தொகை கணக்கிடப்படும்.

அதன்படி எம்பி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 54265 ரூபா. இதில் மூன்றில் ஒரு பகுதியான 18095 ரூபாவே ஓய்வூதியத் தொகையாக கிடைக்கப்பெறும்.

எம்பி ஒருவரின் மாதாந்த சம்பளம் – அனைத்து கொடுப்பனவுகளும் உள்ளடங்களாக சுமார் 150000 ரூபாவாகும்.

2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் 5 வருட ஆயுட்காலம் 2020 ஆகஸ்ட் 17 ஆகும்.

19 வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய 4 1/2 வருட பூர்த்தியில் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2020 பெப்ரவரி 17 அன்று 4 1/2 வருடம் பூர்த்தியாகின்றது.

Web Design by The Design Lanka