ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு » Sri Lanka Muslim

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

IMG_20191118_131009

Contributors
author image

Editorial Team

தெரிவுக் குழுவின் அனுமதியின் கீழ் மாத்திரமே அரச நிறுவனங்களுக்கான உயர் அதிகாரிகளை நியமிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மாத்திரமே இடைக்கால அரசாங்கத்திற்கு அமைச்சரவை நியமிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பாரிய எதிர்ப்பார்ப்புடனே பொதுமக்கள் எம்மை வெற்றியடையச் செய்தனர்.

எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. இந்த சவால்களை வெற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலப்பகுதியில் நிலவிய அரசியல் கலாசாரம் தொடர்பில் பொதுமக்கள் பாரியளவில் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

புதிய அரசாங்கம் அந்த கலாசாரத்தில் இருந்து வௌியே வந்து பொதுமக்கள் எதிர்ப்பார்த்த புதிய சகாப்தத்திற்கு செல்ல வேண்டும்.

அதற்காக, நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொதுமக்களிடம் உறுதியளித்த விடயங்களை செயற்படுத்த இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உதவியை எதிர்ப்பார்க்கிறேன்.

நாம் அமைச்சரவையை 15 ஆக மட்டுப்படுத்தியுள்ளோம். அந்த அமைச்சர்களின் கீழ் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அந்த இராஜாங்க அமைச்சர்களுக்கு தமது கடமைகளை சிறந்த முறையில் செயற்படுத்த ஒத்துழைக்குமாறு புதிய அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் கையெழுத்திட்டு கையெழுத்திட்டு பயிற்சி மாத்திரமே எடுத்தார்கள். அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்க வில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

அந்த குற்றச்சாட்டுக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். இராஜாங்க அமைச்சர்கள் அவர்களின் கடமைகளை சிறந்த வகையில் முன்னெடுக்க முழு ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

Web Design by The Design Lanka