மொஹான் சமரநாயக்க ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் நாயகமாக நியமன » Sri Lanka Muslim

மொஹான் சமரநாயக்க ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் நாயகமாக நியமன

IMG_20191126_221626

Contributors
author image

Editorial Team

சிரேஷ்ட ஊடகவியலாளா் ரஷ்யா மொஹான் சமரநாயக்க ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஊடக துறையில் 4 தசாப்தகால அனுபவத்தைக்கொண்ட தவச தினப்பதி, சன் பத்திரிகைகளை வெளியிட்ட தவச நிறுவனதத்தில் தனது ஊடகத்துறை பணியை ஆரம்பித்தார். இதன் பின்னர் இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் துணை ஆசிரியராகவும்; பணியாற்றியதுடன், 5 வருட காலம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் செய்தி பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தகவல் துறையின் தலைமை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார். அத்தோடு ஜனாதிபதி பேச்சாளராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka