ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம் » Sri Lanka Muslim

ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம்

IMG_20191120_200500

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு இன்று (28) பயணிக்கவுள்ளார்.

இந்திய பிரமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.

அத்துடன் இந்திய பிரதமருடன், ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்தைகளிலும் ஈடுடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய அரசின் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

Web Design by The Design Lanka