2020 இல் பாடசாலைகளுக்கு 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் இணைப்பு » Sri Lanka Muslim

2020 இல் பாடசாலைகளுக்கு 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் இணைப்பு

banthula

Contributors
author image

Editorial Team

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 2020 ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று தகவல் தொடர்பாடல், தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார்.

ஹோமாகம ஆட்டிக்கல கனிஷ்ட வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இரு மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதா அமைச்சர் பந்துல குணவர்த்த சுட்டிக்காட்டினார்.

Web Design by The Design Lanka