25 மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகள் » Sri Lanka Muslim

25 மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகள்

IMG_20191201_105935

Contributors
author image

Editorial Team

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 25 மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகளை அமைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது ஸ்தாபிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் கல்வி நிலை மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்த நிலைமையை மேலும் மேம்படுத்தும் வகையில் தமது அமைச்சு அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka