முஸ்லிம் மக்கள் சார்பில் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை கவலைக்குரியது » Sri Lanka Muslim

முஸ்லிம் மக்கள் சார்பில் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை கவலைக்குரியது

IMG_20191202_090117

Contributors
author image

Editorial Team

புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட விடயத்தில் சிறுபான்மை சமூகம் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் மக்கள் சார்பில் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை கவலைக்குரியது எனவும் கூறியுள்ளார்.

இந்த செயற்பாடு இன ரீதியான முறுகள் நிலைக்கு வித்திட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஜனநாயக நாட்டில் அனைத்து இனமக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பிரதநிதியையும் புதிய அரசாங்கம் ஏற்படுத்த தவறியுள்ளமை அந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka