பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீரவுக்கு பிரதமர் தொடர்புப் பிரிவு » Sri Lanka Muslim

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீரவுக்கு பிரதமர் தொடர்புப் பிரிவு

IMG_20191204_101325

Contributors
author image

Editorial Team

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக பிரதமர் தொடர்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் அலுவலகத்தின் இந்த பிரிவு, நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

அலரிமாளிகைக்கு அருகில் இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் முகவரி இலக்கம் 101இ ஆர்.டீ.மெல் மாவத்தை கொள்ளுப்பிட்டி என்பதாகும்
எவருக்கும் தமது நெருக்கடிககளை முறையிட்டு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்..

பொது மக்களின் முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும். அதனைத்தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதா என்பது பற்றியும் கண்டறியப்படவுள்ளது.

இதன் போது உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது மக்களின் பிரச்சினைகள பொது மக்களின் முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

பிரச்சினைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கை கடிதங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
அதன் பின்னர், மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கண்காணிக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka