பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு 6வயது இஸ்லாமிய சிறுவன் எழுதிய கடிதம்! » Sri Lanka Muslim

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு 6வயது இஸ்லாமிய சிறுவன் எழுதிய கடிதம்!

IMG_20191204_142432

Contributors
author image

Editorial Team

News7

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு, இலங்கையின் சுற்றுச்சூழலை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி லண்டனைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.

கடிதம் அனுப்பிய சிறுவன் அப்துல்லா அபுபைத்திற்கு நன்றி தெரிவித்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அக்கடிதத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளதுடன், இன்று காலையில் எனக்கு 6 வயது சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் கிடைத்தது. இக்கடிதம் எனக்கு வெகுவாக உத்வேகம் தந்ததுடன் ஊக்கமளித்தது. இளம் தலைமுறையினர் மீதான பொறுப்புகளை நினைவுபடுத்தும் விதமாகவும் இது இருந்தது. ஒரு நாள் நிச்சயம் அச்சிறுவனை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேம். உனக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

Web Design by The Design Lanka