முஸ்லிம் சமூகத்தில் பொதுக் குறியீடும் , புதுநோக்கும் » Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகத்தில் பொதுக் குறியீடும் , புதுநோக்கும்

Contributors
author image

Editorial Team

 

இலங்கையில்உள்ள பொது இடங்கள், மற்றும் பொதுப் போக்குவரத்து சாதனங்களான அரச, தனியார் வாகனங்களையும், எல்லா இன மக்களும் உபயோகின்றனர், ஆனால் அவ்வாறான இடங்களில் காணப்படும் சமய அடையாளங்கள் , குறித்த ஒரு சில சமயங்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன,இதற்கான காரணம் என்ன என்பது பற்றிய பதிவே இதுவாகும்,

#சமய_அடையாளங்கள்,

குறித்த அரச, தனியார் இடங்களிலும், வாகனங்களிலும் மக்கள் பணம் செலுத்தி உபயோகிக்கின்றனர் இந்நிலையில் அதில் சமயங்களைப் பிரதிபலிக்கும் அடையாளங்கள் அவசியமா? என்ற கேள்வி எழுந்தாலும் அது ஒரு நடை முறையாகி விட்டது, புத்த பெருமானின் படம், இந்துக் கடவுள்கள், ஏசுநாதர் என்ற உருவங்களும், இன்னும் சில குறியீடுகளும் பரவலாக உபயோகிக்கப்படுகின்றன.

#பயண_பாதுகாப்பு,

குறிப்பாக பிரயாணங்களின் போது மக்கள் தமது பாதுகாப்பிற்காக, கடவுளர்களை பிரார்த்திப்பதும், உண்டியல்களில் காசு போடுவதையும் தமது பயணத்திற்கான பாதுகாப்பாகவும், பயணம் இறை திருப்தியுடனும் அமையும் என எண்ணுகின்றனர், அதற்காக , சாரதி, நடத்துனர், பொதுமக்கள் என்போர் தமது விருப்பக் கடவுள்களையும், அடையாளங்களையும் வாகனங்களில் வைத்திருக்க விரும்புகின்றனர்.

#முஸ்லிம்_அடையாளமும்_வெற்றிடமும்,

பெரும்பாலான, இடங்களில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ள அதே வேளை, அங்கு இஸ்லாத்தினதோ, முஸ்லிம்களினமோ, அடையாளம் வெற்றிடமாகவே, உள்ளது, மிகவும் அரிதாக,ஒரு சில நிறுவனங்களிலும்,பஸ்களிலும் கஃபாவினது, அல்லது, நட்சத்திரம் ,பயன்படுத்தப்படுகின்றது,

#முக்கியத்துவம்,

குறித்த சமய அடையாளங்கள் பயன்படுத்தப்படும் வேளை அது இலங்கையில் உள்ள சமயங்களின் ஒரு சமூக அடையாள பிரதி நிதித்துவமாகவே பார்க்கப்படுகின்றது, இவ்வாறான இடங்களில் இஸ்லாத்திற்கும், முஸ்லிமுக்கும் இடமில்லாமலே உள்ளது, இது பலரையும் பல கோணங்களில் சிந்திக்க தூண்டினாலும், இந்த இடை வெளிக்கான காரணமும் முஸ்லிம் சமூகமேயாகும், பிற சமயத்தவர்களும், பொறுப்பு வாய்ந்தவர்களும் காட்சிப்படுத்த தயாராக இருந்தாலும் ,முஸ்லிம் சமூகத்தில் பொதுக் குறியீடு இல்லாமல் உள்ளது

#யார்_பொறுப்பு?

ஒரு நாட்டில் உள்ள பொது இடங்களில் சமய அடையாளங்கள் என்பது குறித்த நாட்டின் சமூகங்களையும் பிரதிபலிப்பதுடன், அதனைப் பயன்படுத்தும் உள்நாட்டு, வெளிநாட்டு மக்களும் ,பிரயாணிகளும் குறித்த சமயத்தின் பிரதி நிதித்துவமான சமூகம் இத்நாட்டில் வாழ்வதை உளவியல் ரீதியாக உணர்வர்,

ஆனால் அந்த நிலை முஸ்லிம்களுக்கு இல்லாமல் உள்ளது இந்த வெற்றிடம் பல விளைவுகளை மறைமுகமாகவும் பிரதிபலிக்கும், இதனை சகோதர இன மக்கள் உபயோகிக்கத் தயாராக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தில் இதற்கான பொதுக்குறியீட்டு அங்கிகாரம் இதுவரை இல்லை,

அந்த வகையில் முஸ்லிம்கள் தமது சமூகத்தையும், சமயத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பொதுக்குறியீடு அற்ற சமூகமாக இரும்ப்பது மிகவும் வெதனையானது மட்டுமல்ல அது பல இடங்களில் சமூக ரீதியான பின்னடைவுகளையும் கொண்டு வந்துள்தை கடந்த காலத்தில் அவதானிக்கலாம்,

#முன்னோர்_உதாரணம்,

இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் முன்னோர்கள் தமது சமூகத்தின் அடையாளமாக, பச்சை நிற நட்சத்திரத்துடனான பிறையையும், இன்னும் சில இடங்களில் *786* என்ற இலக்கத்தையும் வியாபார குழுக்குறியாகவும் பயன்படுத்தி வந்தனர், ஆனால் பிற்காலத்தில் வந்த சமயக் இயக்க வாதிகள் அதற்கான பொதுச் சமூக அங்கிகாரத்தை இல்லாமலாக்கினர், ஆனால் அதற்கான மாற்று வழிமுறையை அவர்கள் முன்வைக்க வில்லை,

#என்னசெய்யலாம், ??

எல்லா சமூகங்களும் ஒன்றிணையும் பொது இடங்களிலும், வாகனங்களிலும் முஸ்லிம்கள் சார்பாகவோ, இஸ்லாத்தின் அடையாளமாகவோ எதனைப் பயன்படுத்துவது என்ற ஒரு “பொதுக் குறியீடு” பற்றிச் சிந்திக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும், அல்லது எமது முன்னோர் பயன்படுத்திய அடையாளங்களைப் பயன்படுத்த முழுச்சமூகவும் அங்கிகாரத்தை வழங்க வேண்டும், இன்றேல் எல்லாமக்களும் இந்த தேசத்தில் ஒன்றிணையும் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் வெற்றிடச் சமூகமாகவே உணரப்படுவது தொடரும்,

இது தொடர்பில் சமூக, சமயத் தலைவர்கள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களாயின், ஒரு சமூக இடைவெளியைப் பூர்த்தி செய்ததாக அமையும்,

(இது தொடர்பான ஆக்கபூர்வமான பின்னூட்டல்கள், அனுபவங்கள் மட்டுமே எதிர்பார்க்கப் படுகின்றன.)

முபிஸால் அபூபக்கர்
பேராதனைப் பல்கலைக்கழகம்.
06:12:2019

Web Design by The Design Lanka