கிண்ணியா மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது » Sri Lanka Muslim

கிண்ணியா மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது

Contributors
author image

Editorial Team

உப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்தானதால் அங்கு இருந்த ஒருவர் இறந்ததுடன் படகில் இருந்த 2 நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை நேற்று (08) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

உப்பாரு பாலம் அருகே டிங்கி படகொன்று விபத்துக்குள்ளானதை பொலிஸார் இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் கடற்படை தங்கள் கடற்படைக் படகுகளுடன் சுழியோடி மாலுமிகளின் குழுவையும் குறித்த இடத்துக்கு இணைத்தது.

அதன்படி, அங்கு இருந்த 5 நபர்களில் இருவர் மீட்கப்பட்டனர்.

மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு ஒரு நபரின் சடலம் படகு விபத்தான பகுதியில் இருந்து கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படை தேடுதல் பணியை மேலும் மேற்கொள்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கிண்ணியா பகுதியில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்த பின் கிண்ணியா அடிப்படை மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka